உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் இன்று (11) முதல் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பில் நேரடியாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழும் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளை ஆரம்பமாகும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு எந்தவகையிலும் இடைஞ்சலாக செயற்பட முடியாது எனவும், அப்பரீட்சை இடம்பெறும் இடத்துக்கு அருகாமையில் ஒலிபெருக்கிப் பயன்பாடு மற்றும் கூட்டங்கள் நடாத்துதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

