டொரன்டோ தமிழ் போலீஸ் அதிகாரி – ரொஷான் நல்லரட்ணம் அரசியலில் குதித்தார்

261 0

கனேடிய தமிழர்கள் மத்தியில் டோரன்றோ காவல்த்துறை அதிகாரியாக கடந்த 10 வருடங்களாக கடமையாற்றி வந்த – பல்லின மக்களாலும் நன்கு அறியப்பட்ட ரொஷான் நல்லரட்ணம் கனேடிய கன்சர்வேர்டிவ் கடைசியில் மார்கம் தோரன்கில் தொகுதியில் 2018 ல் வரவுள்ள தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

நேரடி நேர்காணல் ஒன்றில் தோன்றிய அவர் கூறும் கருத்துக்கள் மற்றும் சமுதாயம் நோக்கியத அவரது பார்வை – மிகவும் வித்தியாசமான ஒர் பார்வையாகவே மக்களை ஈர்த்துள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் – கனேடியத்தமிழர்களது வாழ்க்கை முறைகளை – கடின உழைப்புகளை தானும் பாட்டுணர்ந்து கடந்து வந்ததாகவும் 13 விதமான தொழில் தளங்களில் அடிப்படை தொழிலாளியாக இருந்து சாதாரண மக்களது இன்ப துன்பங்களையும் அனுபவமாக பெற்றதையும் நினைவுகூர்கிறார்.

கனேடிய தமிழர்கள் மத்தியில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உற்று நோக்கப் படும் காணொளி நேர்காணலாக இக்காணொளி உள்ளது.

இலங்கை – வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட ரொஷான் நல்லரட்ணம் தனது 2 வது வயதில் 1985 ல் புலம்பெயர்ந்து தமிழகத்தில் பெற்றோருடன் தனது ஆரம்பகால கல்வியை ஆரம்பித்தார். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தனது உயர்தர கல்விகளை முடித்த அவர் – துடுப்பாட்ட விளையாட்டுகளில் தமிழக இளைஞர்களிடம் பிரபலமாக அறியப்பட்டவர் 2005 காலப்பகுதியில் கனடாவுக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்தார் – கனடா டொராண்டோவில் சட்டம் ஒழுங்கு துறைகளில் ஆர்வம்கொண்டு தனது கல்விகளைத் தொடர்ந்த அவர் கடும் முயற்சிகளின் பயனாக நகர காவலத்துறை அதிகாரியாகி சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார்.

கனேடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான கன்சர்வேர்டிவ் கட்சியின் உறுப்பினராக தொண்டனாக நீண்டகாலம் இருந்துவந்த அவர் எதிர்வரும் 2019 மார்க்கம் தொரன்கில் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியுள்ளார் – ஏன் எதற்கு எப்படி என்ன நோக்கம் யார் பின்னணி என்கின்ற பல கேள்விகளுக்கு அவரளித்துள்ள பதில்களால் – கனேடிய தமிழர்கள் வியந்துபோயுள்ளனர் – அரசியல்வாதிகள் பலவிதம் அதிலும் ரொஷான் நல்லரட்ணம் ஒருவிதம். நீங்களே இந்த நேர்காணலை பாருங்க புரியும்.

 

 

 

 

Leave a comment