வறட்சி காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

579 10

நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 339,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த மாவட்டங்களில் புத்தளம் மாவட்டமே அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அங்கு 67,095 குடும்பங்களை சேர்ந்த 217,062 மக்கள் பாதிக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment