அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதி சந்திப்பு

491 0

இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்லஸ் ஹேஸ் மற்றும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பின் இறுதியில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

குறித்த சந்திப்பில் இராணுவப்படையின் பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment