தேங்காய், பருப்பு கருவாடு அதிக விலைக்கு விற்பனை: 353 பேருக்கு சிக்கல்

232 0

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக தேங்காய், பருப்பு மற்றும் கருவாடுகளை விற்பனை செய்த 353 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நான்கு உணவுப் பொருட்களுக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ 130 ரூபாவாகவும் உயர்ந்த பட்ச சில்லறை விலை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இதனை மீறும் வகையில் பொருட்களை விற்பனை செய்பவர்களை இனங்காணும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக, அச் சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேங்காயை அதிக விலைக்கு விற்ற 97 வர்த்தகர்களுக்கும், பருப்பை அதிக விலைக்கு விற்ற 154 வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேங்காய் தொடர்பான சுற்றிவளைப்புக்களை மேற்கொண்ட போது, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பகுதியில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஹசித திலகரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment