முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்றவருக்கு அபராதம்

Posted by - December 13, 2017

முல்லைத்தீவு நகரின் ஊடாக சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற ட்ரக்டர் சாரதி ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, அனுமதிப் பத்திரம் இன்றி மண் ஏற்றிச் சென்றமைக்காக 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் 28ம் திகதி இடம்பெறவுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

Posted by - December 13, 2017

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அநுர குருப்பு மற்றும் முன்னாள் உப தலைவர் எல். டி விஜேவர்தன ஆகியோர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். குறித்த இருவரும் இதுவரை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களான தெஹியோவிட்ட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோமஸ் சமிந்த மற்றும் தெரணியகல ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்றுச் சபையின்

இவ்வருடத்தில் மட்டும் 8,548 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு

Posted by - December 13, 2017

இந்த வருடத்தில் 8 ஆயிரத்து 548 சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இவற்றில் அதிகப்படியாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து 2 ஆயிரத்து 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கல்விகற்குமாறு வற்புறுத்துவது குறித்து ஆயிரத்து 298 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 481 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திய

மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Posted by - December 13, 2017

பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் பூண்டுலோயா – தொரண சந்தியில் வைத்து, மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உரியிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

புகையிரத வேலைநிறுத்தம் முடிவுக்கு

Posted by - December 13, 2017

புகையிரத ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளனர். அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேகொள்ளப்பட்டதாக புகையிரத ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக சித்தி பாரூக் நியமனம்

Posted by - December 13, 2017

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக சித்தி மொஹமட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வழங்கி வைத்தார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக முதல் தடவையாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவாகும். இவருக்கு முன்னர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக இருந்த சுதர்ஷன குணவர்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலூர் ஜெயிலில் இருந்து பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றம்

Posted by - December 13, 2017

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் இருந்து சென்னை புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.

யூ டியூப் மூலம் 70 கோடி ரூபாய் சம்பாதித்த 6 வயது சிறுவன்

Posted by - December 13, 2017

இணையதளங்களில் பதிவு செய்த தனது வீடியோ மூலம் 6 வயது சிறுவன் ஒரு ஆண்டில் 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் தேசத்தை காப்பதில் தோற்றுவிட்டீர்கள்: தாக்குதலுக்கு முன் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஆசாமி

Posted by - December 13, 2017

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பேருந்து முனையத்தில் தாக்குதல் நடத்திய வங்காளதேச ஆசாமி, பேஸ்புக்கில் அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டில்லு குழுவின் மேன்­மு­றை­யீட்டை நிரா­க­ரித்த நீதி­பதி இளஞ்­செ­ழியன்

Posted by - December 13, 2017

யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டு­வந்த டில்லு எனப்­படும் குழு­வி­ன­ருக்கு நீதிவான் நீதி­மன்றால் வழங்­கப்­பட்ட தண்­டனை சரி­யா­னது என்றும் அவர்­க­ளது மேன்­மு­றை­யீட்டு மனுவை நிரா­க­ரிப்­ப­தா­கவும் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ். மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒரு­வரை வாளால் வெட்­டிய குற்­றச்­சாட்டில் ஐந்து ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ ணையை தொடர்ந்து குற்றம் நிரூ­பிக்­கப்பட்ட 8 பேருக்கு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதிமன்றம் தண்­டனை தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. இதன்­படி சத்­தி­ய­நாதன் அன்­ரனிஸ் அல்லது