இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக சித்தி பாரூக் நியமனம்

227 0

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக சித்தி மொஹமட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வழங்கி வைத்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக முதல் தடவையாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவாகும்.

இவருக்கு முன்னர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக இருந்த சுதர்ஷன குணவர்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment