இலஞ்ச, ஊழல் சட்டத்தில் திருத்தம்

Posted by - December 21, 2017

30 வருட காலம் பழைமை வாய்ந்த இலஞ்ச, ஊழல் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க முனையும் நபர்களுக்கான வழிவகைகளை முற்றாக இல்லாது செய்வதே தமது நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. அத்துடன்,

2018 ஆம் ஆண்டில் புதிய வகை கடவுச்சீட்டு

Posted by - December 21, 2017

புதிய வகை கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்துளார். குறித்த கடவுச்சீட்டினை சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறித்த கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் அமைச்சரவையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குடிவரவு

நுவரெலியாவில் தாக்கல் செய்யப்பட்ட 69 வேட்பு மனுக்களில் ஒன்று நிராகரிப்பு

Posted by - December 21, 2017

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களும் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குமான வேட்புமனுவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை, லிந்துலை நகரசபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அட்டன் டிக்கோயா நகர சபைக்கு ஐக்கிய தேசியகட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஆறு அரசியல்

Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

Posted by - December 21, 2017

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் குடிவரவு குடியகல்வு விடயங்களுடன் தொடர்புபடுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்க தெரிவித்தார். இந்த பணிகளை விரிவுபடுத்துவதற்காக கூடுதலான அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கும் பயணிகளின் வசதிகருதி தேவையான குடிவரவு குடியகல்வு வசதிகளை செய்துகொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “இதற்கான ஒழுங்குகள் தற்பொழுது விமானநிலையத்தில் உள்ள எமது பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே விசா அனுமதியினை

கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிள்ளைகளுக்கு உதவி

Posted by - December 21, 2017

கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் பிள்ளைகளுக்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா இழப்பு! கோத்தாவின் திடீர் முடிவினால்! – விசாரணைக்கு நடவடிக்கை?

Posted by - December 21, 2017

பாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பு நகரில் இருந்து அகற்றும்- முன்னைய அரசாங்கத்தின் திட்டமிடப்படாத – திடீர் முடிவினால் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் வாடகைக்குப் பெற்றுள்ள 15 கட்டடங்களுக்காக ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபாவை வாடகைக் கொடுப்பனவாக வழங்க வேண்டியுள்ளது.

எதிர்பார்த்ததற்கு முன்னரே மேம்பாலத்தை திறக்கப்போகும் அரசாங்கம்

Posted by - December 21, 2017

தேசிய அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைய ராஜகிரிய மேம் பாலத்தின் பணிகள் 11 மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - December 21, 2017

சைட்டம் பிரச்சனைக்கு சரியானத் தீர்வைப் பெற்றுக்​ கொடுக்கவில்லை எனத் தெரிவித்து இன்று தொடக்கம் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியப்பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் 5 அதிபர்கள் தொடர்பில் விசாரணை

Posted by - December 21, 2017

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகிப்பத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.