நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகிப்பத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
5 பாடசாலை அதிபர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வியமைச்சின் பணிப்பாளரின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளதாகவும், குறித்த பாடசாலைகள் மத்திய மாகாணத்துக்குரிய பாடசாலைகள் என்பதால் இது தொடர்பான விசாரணை அறிக்கைகளை வழங்குமாறு மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

