சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

242 0

சைட்டம் பிரச்சனைக்கு சரியானத் தீர்வைப் பெற்றுக்​ கொடுக்கவில்லை எனத் தெரிவித்து இன்று தொடக்கம் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியப்பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேப்போல் வைத்திய பீட மாணவர்களின் செயற்பாட்டு குழுவும் இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பை வழங்குவர் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சைட்டம் தனியார் வைத்தியக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் ஸ்லீட் நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a comment