பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - December 22, 2017

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் ஏழு பேர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். மஹரகம நகர சபைக்காக கட்சியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசியை காதில் வைத்து புகையிரதத்தை கண்டும் அசட்டையாக சென்ற சாரதி : ஒருவர் பலி – மூவர் காயம்

Posted by - December 22, 2017

நீர்கொழும்பு – கட்டுவ பிரதேசத்தில் பயணிகள் புகையிரதத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று பேர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாதாரண புகையிரதம் நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் கடந்த போது கடவையில் நுழைந்த வாகனம் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. எவ்வாறாயினும், அனர்த்தம் இடம்பெற்ற தருணத்தில் 4 பேர் வாகனத்தினுள் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மற்றைய

பேலியகொட பிரதேசத்தில் பாரிய தொகை போதை மருந்துகள் கண்டெடுப்பு

Posted by - December 22, 2017

பேலியகொட பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை போதை மாத்திரைகள் கைப்பற்றப்படுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவற்றின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழில் வழக்கு நடைபெறும் போதே பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக பிக்குவின் உடல்

Posted by - December 22, 2017

யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்படுகின்றது.பலத்த இராணுவ பாதுகாப்புடன் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு முற்றவெளி நோக்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகின்றது.யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வரவுள்ள 2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம்

Posted by - December 22, 2017

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 2018 ஜனவரி 23 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு கொண்டு

விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரத சேவை

Posted by - December 22, 2017

புதுவருடம், நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7ம் திகதி வரை விசேட புகையிரத சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த புகையிரத சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி செயற்படும் என மேலதிக புகையிரத மேலாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இம்மாதம் 22, 24, 26 மற்றும் ஜனவரி 2, 4, 6, ஆகிய தினங்களில் காலை 7.03 இற்கு கொழும்பிலிருந்து செல்லும் குறித்த புகையிரதம்

தேர்தல் சட்டங்களை மீறிய நால்வர் கைது

Posted by - December 22, 2017

தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் பேரணி சென்றமை மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட குறித்த நபர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வேட்புமனுத்தாக்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து குறித்த நபர்கள் வாகன பேரணி செல்லும் வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களின் முச்சக்கர வண்டியை நிறுத்த முயற்சித்த வேளையில் பொலிஸ் அதிகாரியின் மேல் மோதி தப்பிச்செல்ல

ஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்?: நாமல்

Posted by - December 22, 2017

அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ள விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) நாமல் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமாகவே குறித்த கேள்வியினை எழுப்பியுள்ளார். மேலும், சுகாதார காரணங்களை அடிப்படையாகக்

யாழில் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் முற்றாக நிராகரிப்பு!-நா.வேதநாயகன்

Posted by - December 22, 2017

யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பாக 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், வேட்புமனு தாக்கல் செய்யும் காலஎல்லை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்பு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன!-சுந்தரம் அருமைநாயகம்

Posted by - December 22, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அன்னலெட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு