யாழில் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் முற்றாக நிராகரிப்பு!-நா.வேதநாயகன்

28921 0

யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பாக 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

வேட்புமனு தாக்கல் செய்யும் காலஎல்லை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்பு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை கட்சிகள் முன்வைத்தன.

இதன்போது 75 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் மிக நுணுக்கமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்தோம். அந்த வகையில் 125 வேட்பு மனுக்களில் 05 வேட்பு மனுக்களை முற்றாக நிராகரித்து இருந்தோம். ஏனைய சில சபைகளில் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் சுயேட்சை குழுக்களாக போட்டியிடுவோருக்கு இன்று சின்னங்களும் வழங்கினோம் எனவும் வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று பகல் 12 மணியுடன் வேட்புமனு கையளிக்கும் கால எல்லை முடிவடைந்த நிலையில் அதுவரையில் 125 வேட்பு மனு பத்திரங்களே யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளிக்கப்பட்டன.

இரண்டு வேட்பு மனுக்கள் உரிய கால பகுதிக்குள் கையளிக்கப்படவில்லை. கையளிக்கப்பட்ட 125 வேட்பு மனுக்களில் 120 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 5 வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டன.

நெடுந்தீவு பிரதேச சபை , வலி.வடக்கு பிரதேச சபை , வலி.கிழக்கு பிரதேச சபை , யாழ்.மாநகர சபை ஆகிய சபைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வலி.மேற்கில் வேட்பு மனு தாக்கல் செய்யத சுயேட்சை குழு ஒன்றினதும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment