நியுயோர்க்கில் சந்தேகத்துக்குரிய தாக்குதல்- 8 பேர் பலி

Posted by - November 1, 2017

நியுயோர்க்கில் நடத்தப்பட்ட சந்தேகத்துக்குரிய தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர். நியுயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதைக்குள் பிரவேசித்த பாரவூர்தியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 29 வயதான சாரதி ஒருவர் காவற்துறையினரால் சுடப்பட்டதுடன், காயங்களுடன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மேலும் 11 பேர் வரையிலா காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சாய்ஃபுலோ சாய்போ என்றும் 2010ம் ஆண்டு ஏதிலியாக அமெரிக்காவில் பிரவேசித்த அவர் ஃப்ளோரிடாவில் வசித்து

பிணை முறி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்படும்- வசந்த சமரவிங்க

Posted by - November 1, 2017

பிணை முறி தொடர்பில் இதுவரையிலும் வெளியான தகவல்கள் உள்ளிட்ட தொலைபேசி உரையாடல்கள் சில, இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரவிங்க இதனை  தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த குரல் பதிவு மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தாம் கைது செய்யப்படுவதையோ அல்லது தமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதையோ

தேர்தல்கள் ஆணைக்குழு மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் கூடவுள்ளது

Posted by - November 1, 2017

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஒன்று கூடவுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறித்த வர்த்தமான அறிவித்தல் வெளியாக்கப்பட்டதன் பின்னர், இந்த தேர்தல் குறித்த திகதி அறிவிக்கப்படும் என்றும் மகிந்த தேசப்பிரிய முன்னர் கூறி இருந்தார். இதன்படி இந்த வர்த்தமானி இன்று வெளியாக்கப்படவுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

அம்பலாங்கொட பிரதேசத்தில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்

Posted by - November 1, 2017

அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில் நேற்றிரவு 7.15 அளவில்,  உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, அவரது மகன்மார்கள் 3 பேருடன், மற்றுமொருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக

தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு

Posted by - November 1, 2017

தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் இன்று முதல் 50 சதவீத்தினால் அதிகரிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும் வர்த்தக ரீதியான பொதிகளுக்கு மாத்திரமே இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்கள வர்த்தக மற்றும் விநியோக முகாமையாளர் என்.ஜே இதிபொலகே தெரிவித்துள்ளார். மாறாக சாதாரண பொதிகளுக்கு வழமையான கட்டணமே அறவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து வர்த்தமானி- ஃபைசர் முஸ்தபா

Posted by - November 1, 2017

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யும் வர்த்தமானியில், இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதன்படி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் இன்றுடன் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - November 1, 2017

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சீனாவின் பெய்ஜிங்க நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் முக்கியமான பங்காளியாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுப் படுத்தும் வகையில், விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி விடயம் உறுதி- ஜெயம்பதி விக்ரமரத்ன

Posted by - November 1, 2017

புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், ஒற்றையாட்சி என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் யாப்பு தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பான அரசியலமைப்பு பேரவையினர் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் மத்திய சட்டவாக்க சபையாக நாடாளுமன்றம் இருக்கும். அதேநேரம் உப சட்டவாக்க சபைகளாக பல சபைகள் உருவாக்கப்படலாம். ஆனால்

மானஸ்தீவு அகதிகள் முகாமில் பதட்ட நிலை

Posted by - November 1, 2017

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ்தீவில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது பதட்ட நிலை நிலவுவதாக அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பப்புவா நியுகினி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குறித்த முகாமை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 200 அகதிகள் வரையில் நவுறு தீவில் உள்ள முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஏனைய 600 அகதிகள்; வரையில் தொடர்ந்தும் மானஸ் தீவிலேயே தங்கி இருப்பதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் சார்பில் குறித்த முகாம் மூடப்படுவதற்கு

வவுனியாவில் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்….(காணொளி)

Posted by - October 31, 2017

வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்றித்தருமாறு கோரியே கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் பதற்ற நிலமை காணப்பட்டதால் பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இக்கவனயீர்ப்பு கோராட்டம் குறித்து கடைகளுக்கு சொந்தமான