மானஸ்தீவு அகதிகள் முகாமில் பதட்ட நிலை

411 0

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ்தீவில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது பதட்ட நிலை நிலவுவதாக அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பப்புவா நியுகினி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குறித்த முகாமை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த 200 அகதிகள் வரையில் நவுறு தீவில் உள்ள முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஏனைய 600 அகதிகள்; வரையில் தொடர்ந்தும் மானஸ் தீவிலேயே தங்கி இருப்பதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சார்பில் குறித்த முகாம் மூடப்படுவதற்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அங்கிருந்து பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் வெளியேறி இருப்பதாகவும், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படகு மூலம் அவுஸ்திரேலிய சென்றவர்களே இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம் மூடப்பட்டதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் எதுவும் அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் குறித்த முகாம் மூடப்படுவது தங்களது உரிமைகளை மீறும் வகையிலானது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அங்குள்ள அகதிகள்; தற்போது உணவின்றி, அச்சத்துடன் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் அவர்களே காவல்புரிவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment