தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் இன்று முதல் 50 சதவீத்தினால் அதிகரிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் வர்த்தக ரீதியான பொதிகளுக்கு மாத்திரமே இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்கள வர்த்தக மற்றும் விநியோக முகாமையாளர் என்.ஜே இதிபொலகே தெரிவித்துள்ளார்.
மாறாக சாதாரண பொதிகளுக்கு வழமையான கட்டணமே அறவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

