நியுயோர்க்கில் நடத்தப்பட்ட சந்தேகத்துக்குரிய தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர்.
நியுயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதைக்குள் பிரவேசித்த பாரவூர்தியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 29 வயதான சாரதி ஒருவர் காவற்துறையினரால் சுடப்பட்டதுடன், காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மேலும் 11 பேர் வரையிலா காயமடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சாய்ஃபுலோ சாய்போ என்றும் 2010ம் ஆண்டு ஏதிலியாக அமெரிக்காவில் பிரவேசித்த அவர் ஃப்ளோரிடாவில் வசித்து வந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

