சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்க நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையின் முக்கியமான பங்காளியாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுப் படுத்தும் வகையில், விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

