அம்பலாங்கொட பிரதேசத்தில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்

462 0

அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில் நேற்றிரவு 7.15 அளவில்,  உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, அவரது மகன்மார்கள் 3 பேருடன், மற்றுமொருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொஸ்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட நான்கு பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்துக்கும், நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்துக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment