2 சிறுமிகள் பலி: மின்சார ஊழியர்கள் கவன குறைவை ஏற்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 2, 2017

மின்கசிவு காரணமாக 2 சிறுமிகள் பலியான சம்பவத்திற்கு அரசு பணியாளர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

Posted by - November 2, 2017

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் போராட்­டத்­திற்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க வேண்­டிய பெரும் ­பொ­றுப்பு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பொது அமைப்­புகள் அர­சியல் கட்­சிகள் மற்றும் கல்­விசார் சமூ­கத்­தினர் மற்றும் அனை­வ­ருக்கும் நிச்­சயம் உண்டு. என யாழ்ப்­பாணப் பல்­கலைக்கழக ஊழியர் சங்கம்  -தெரி­வித்­துள்­ளது. தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லை­கோரி யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்து வந்த போராட்­டத்தின் கார­ண­மாக பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் மாண­வர்­களை கல்விச் செயற்­பா­டு­க­ளுக்கு தடை விதித்­த­துடன் விடு­தி­க­ளில் ­இ­ருந்தும் வெளியே­று­மாறு உத்­த­ர­விட்­டது. இது தொடர்பில் பல்­க­லைக்­க­ழக

தமிழகத்தில் டெங்கு கடுமையாக பாதித்துள்ளது: டி.டி.வி.தினகரன்

Posted by - November 2, 2017

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பாதித்துள்ளது என்று திருச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

வித்தியா படுகொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிப்பட்டியலில் இல்லை

Posted by - November 2, 2017

சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க ந­ப­ராக இருந்து விடு­தலை செய்­யப்­பட்ட நபர், அச்­சு­றுத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் குறித்த மாண­வியின் கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற வழக்­கேட்டின் சாட்சிப் பட்­டி­யலில் சாட்­சி­யாக இல்லை என ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்று தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. குறித்த மாண­வியின் கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க­ ந­ப­ராக கைது செய்­யப்­பட்ட பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற வழக்கு நட­வ­டிக்­கை முடி­வ­டைந்து வீடு வரும்­போது தன்னை தேவை­யில்­லாது கோபி என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர்

அமைச்சர் ராஜிதவின் பொய்; ஐ.தே.க. அமைப்பாளர் கருத்து

Posted by - November 2, 2017

பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான இஃப்திகார் ஜெமீல் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (1) நடைபெற்றபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார். இது பற்றிக் குறிப்பிட்ட இஃப்திகார் ஜெமீல், பேருவளையில் ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிவது குறித்து

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது!

Posted by - November 2, 2017

131 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கிரண்ட்பாஸ், நாகலகம்வீதி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 10 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றுமொருவர் கிரண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

இலங்கை – அவுஸ்ரேலியா உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - November 2, 2017

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இந்த சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

கீதாவின் பதவிக்கு ஆப்பு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Posted by - November 2, 2017

இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவுக்கு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படமுடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பிலான மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Posted by - November 2, 2017

புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் இலங்கை கடற்படையின் 22வது கடற்படை தளபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவிற்கு பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடற்படை தளபதி தனது கடமைகளை பொறுப்பேற்றதை அடுத்துப் பாதுகாப்பு செயலாளரைச் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பத்தை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள்

கீதாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

Posted by - November 2, 2017

இரட்டை பிரஜாவுரிமை காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தொடரப்பட்டிருக்கும் வழக்கின் இறுதித்தீர்மானம் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்குப் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கீதா குமாரசிங்கவினால் உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பிலான வழக்கின் தீர்மானமே இன்று வழங்கப்படவுள்ளது. தென்மாகாணத்தின் இருவர் மூலம் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு