கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

227 0

புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது

குறித்த சந்திப்பில் இலங்கை கடற்படையின் 22வது கடற்படை தளபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவிற்கு பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கடற்படை தளபதி தனது கடமைகளை பொறுப்பேற்றதை அடுத்துப் பாதுகாப்பு செயலாளரைச் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பத்தை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment