இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவுக்கு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படமுடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பிலான மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், இரட்டைக் குடியுறிமையுடன் கீதா இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, உயர்நீதிமன்றமும் அறிவித்துள்ளது.

