ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது!

334 0

131 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கிரண்ட்பாஸ், நாகலகம்வீதி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 10 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றுமொருவர் கிரண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொலன்னாவை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment