கீதாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

202 0

இரட்டை பிரஜாவுரிமை காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தொடரப்பட்டிருக்கும் வழக்கின் இறுதித்தீர்மானம் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்குப் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கீதா குமாரசிங்கவினால் உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பிலான வழக்கின் தீர்மானமே இன்று வழங்கப்படவுள்ளது.

தென்மாகாணத்தின் இருவர் மூலம் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்குப் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட முடியாது என தீர்ப்பளித்திருந்தது.

இதன்பின்னர் குறித்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கீதா குமாரசிங்கவினால் உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment