நவ.19-ம் தேதி நடைபெறும்!அண்ணா பல்கலைக்கழகம்
கனமழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை இன்றைக்குள் நூற்றுக்கு 80 வீதம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். களஞ்சியசாலைகளில் போதுமானளவு எரிபொருள் கையிறுப்பு உள்ளதாகவும் கனிய எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரி குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விடயத்துடன் தொடர்புடைய
சந்தைக்கு தேங்காய்களை விற்காமல் சேமித்து வைத்திருக்கும் பெரிய அளவிலான வர்த்தகர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு தொடர்பிலான வாரியம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த வாரியத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரே கூட்டணியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னர், வேட்பாளர்கள் தொடர்பில் முழுமையான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரே இலட்சணையின்கீழ் போட்டியிட ஏனைய கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா காவல்துறை பிரிவிற்குற்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். வீடொன்றில் சூது விளையாடி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 40, 30, 58 மற்றும் 43 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவல்துறை பிணையில் விடுவித்துள்ளதாகவும், எதிர்வரும் 9ஆம் திகதி திருகோணமலை
அரசியல்வாதிகளின் நெருங்கியவர்களுக்கு பதவிகளை பெற்றுகொடுத்தல் அண்மைக் காலத்தில் அதிகமாக காணக்கூடியதாக இருந்ததாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் வெளிநாடு சென்றாலும், அதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கும் நிதியில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், கடன்களை செலுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வீரவில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை முறைமுகமும், விமான நிலையமும் பாரிய கடன் சுமையாக உள்ளன. இந்தக் கடனை செலுத்தக்கூடிய நிலைமை நாட்டுக்கு இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீன ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்
மினுவாங்கொட 18வது மைல்கல் பகுதியில் டிரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. டிரக் வண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த தூணில் மோதி அங்கிருந்த மின்மாற்றி டிரக் வண்டியில் விழுந்துள்ள நிலையில், டிரக் வண்டியின் முன்னால் பயணித்த 6
ஆசியாவிற்கான நீண்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று முதல் நாளாக ஹவாய் தீவிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ட்ரம்ப் அடுத்ததாக ஜப்பானின், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். அமெரிக்கா மற்றும் வடகொரிய விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பின் ஆசிய விஜயம் அமைந்துள்ளது. ஹவாய் தீவிற்கு சென்றுள்ள ட்ரம்ப், அங்குள்ள இரண்டாவது உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட யூ.எஸ்.எஸ் எதிசோனா கப்பலை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணடாவது உலக
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 31ஆம் திகதி முதல் பெய்து வரும் கடும் மழையால் சென்னை நகரில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இதுவரை 8 பேர் உயிரிந்துள்ளதாக தமிழ செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 105 நிவாரண முகாம்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையுடன் நாகபட்டினத்திலும் பெயந்து வரும் கடும் மழையால் பல வீடுகள் நீரில்