ஜனவரி மாதம் முதல் கடன்களை செலுத்த முடியும் – பிரதமர்

282 0

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கும் நிதியில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், கடன்களை செலுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரவில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை முறைமுகமும், விமான நிலையமும் பாரிய கடன் சுமையாக உள்ளன.

இந்தக் கடனை செலுத்தக்கூடிய நிலைமை நாட்டுக்கு இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சீன ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், கூட்டு திட்டத்தை ஆரம்பிப்பது குறித்த உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய, துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் குத்தகைக்கு வழங்குவதனால், 110 கோடி டொலர் கிடைக்கும்.

எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கிடைக்கும் இந்த நிதியைக்கொண்டு கடனை செலுத்த முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a comment