சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

324 0

கிண்ணியா காவல்துறை பிரிவிற்குற்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடொன்றில் சூது விளையாடி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 40, 30, 58 மற்றும் 43 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவல்துறை பிணையில் விடுவித்துள்ளதாகவும், எதிர்வரும் 9ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment