நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்

376 0

எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை இன்றைக்குள் நூற்றுக்கு 80 வீதம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

களஞ்சியசாலைகளில் போதுமானளவு எரிபொருள் கையிறுப்பு உள்ளதாகவும் கனிய எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விடயத்துடன் தொடர்புடைய பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்தார்.

எரிபொருளைத் தாங்கிய கப்பலொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலினால், நாட்டின் சில பகுதிகளில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் வாகனங்களை நிறுத்திவைத்திருந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

 

Leave a comment