மகிந்த அணியின் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில, தனியாக போட்டி

Posted by - November 6, 2017

மகிந்த அணியில் அங்கம் வகிக்கும்; 6 கட்சிகள் சில மாவட்டங்களில் தனியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. சமவுடமை மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து கட்சிகளும், மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன ஒரே சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி பொது செயலாளர் எஸ்.சூதசிங்ஹ இதனை தெரிவித்தார். எவ்வாறெனினும் சில மாவட்டங்களில் மகிந்த அணியினரால் உருவாக்கப்படும் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெக்சாஸ் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி அனுதாபம் 

Posted by - November 6, 2017

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் துப்பாக்கி தாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் 26 பேர் பலியானதுடன், 30 பேர் வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

டெக்சாஸ் தாக்குதல் – தாக்குதல்தாரி இனங்காணப்பட்டார்

Posted by - November 6, 2017

அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தின் தேவாலயத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அமெரிக்கவின் முன்னாள் வான்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டெவின் பீ.கெலி என்ற 26 வயதுடையவரே தாக்குதல் மேற்கொண்டவர் என அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் டெக்ஸாஸிலுள்ள சிறு நகரொன்றில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30யிற்க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால்

புதையல் தோண்டிய இருவர் கைது

Posted by - November 6, 2017

புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நாரம்மல – மீவௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்ள்ளனர். நாரம்மல் மற்றும் பன்னல பகுதிகளை சேர்ந்த 38 மற்றும் 52 வயதான இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத மர வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பெறுமதியான மர குன்றிகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 46 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து – 5 பேர் பலி, 44 பேர் காயம்

Posted by - November 6, 2017

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – 10ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் சாரதி

நீரில் மூழ்கியவர்களில் இருவர் சடலமாக மீட்பு

Posted by - November 6, 2017

மாத்தளை – லக்கல – தெல்கமு ஒயாவில் நிராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளில் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. இதன்பாடி, நீராடச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த எட்டு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 12 மற்றும் 7 வயதுடைய சிறுமிகளின் உடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள், நீழ்ரில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சவுதி இளவரசர் பலி

Posted by - November 6, 2017

ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார். அந்த நாட்டு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன். இவர் நேற்று அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். ஏமன் நாட்டு எல்லை அருகில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்

கெட்டலோனியா தலைவர் பெல்ஜியம் காவல்துறையினரிடம் சரண்

Posted by - November 6, 2017

கெட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நிலையில், அவர்கள் பெல்ஜியம் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணம் கெட்டலோனியா. அங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் முதலாம் திகதி நடந்தது. இதில் கெட்டலோனியா தனிநாடாக பிரிந்து செல்வதற்கு 90 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 27ஆம் திகதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கெட்டலோனியா பாராளுமன்றம்

முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்பு-ஐக்­கிய தேசிய முன்­ன­ணி கொழும்­பில் முக்­கிய சந்­திப்பு

Posted by - November 6, 2017

கிழக்­கில் புதி­தாக உத­ய­மா­கி­யுள்ள முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­துவச் சபை உறுப்­பி­னர்­க­ளான ஹசன் அலி, பசீர் சேகு­தா­வூத் ஆகி­யோ­ருக்­கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர் அஸாத் சாலிக்­கும் இடை­யில் கொழும்­பில் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும்!

Posted by - November 6, 2017

இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும். இறு­தி­யில் பொது உடன்­ப­டிக்கை­யின் அடிப்­ப­டை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தார்.