விபத்தில் சவுதி இளவரசர் பலி

4734 14
ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார்.
அந்த நாட்டு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன்.
இவர் நேற்று அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.
ஏமன் நாட்டு எல்லை அருகில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் உயிரிழந்தார் என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான ஊழல் தடுப்பு கமிட்டி நேற்று உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்களை கைது செய்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment