முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்பு-ஐக்­கிய தேசிய முன்­ன­ணி கொழும்­பில் முக்­கிய சந்­திப்பு

551 0

கிழக்­கில் புதி­தாக உத­ய­மா­கி­யுள்ள முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­துவச் சபை உறுப்­பி­னர்­க­ளான ஹசன் அலி, பசீர் சேகு­தா­வூத் ஆகி­யோ­ருக்­கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர் அஸாத் சாலிக்­கும் இடை­யில் கொழும்­பில் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

கொள்­ளுப்­பிட்­டி­யில் அமைந்­துள்ள அஸாத் சாலி­யின் இல்­லத்­தில் இடம்­பெற்ற இந்­தச் சந்­திப்­பில், ஜன­வ­ரி­யில் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­த­லில் கூட்­ட­ணி­ய­மைத்து கள­மி­றங்­கு­வது தொடர்­பி­லேயே இரு தரப்­பி­ன­ரா­லும் தீவி­ர­மாக ஆரா­யப்­பட்­டது எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கி­ரஸ் இணையச் பேச்­சு­க்கள் நடை­பெற்ற நிலை­யில், அது இன்­னும் சாத்­தி­ய­மா­காத கார­ணத்­தா­லேயே தற்­போது அந்த வெற்­றி­டத்­துக்கு அஸாத் சாலியைக் கொண்­டு­வ­ரும் நோக்­கி­லேயே இந்­தப் பேச்­சில் மேற்­படி முஸ்­லிம் கூட்­ட­மைப் பா­னது ஈடு­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இந்­தச் சந்­திப்­பின்­போது இறுதி முடி­வு­கள் எது­வும் எட்­டப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. இவ்­வி­ட­யம் குறித்து இன்­னும் தீவி­ர­மாக ஆராய்ந்து அடுத்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்றே இரு­த­ரப்­பின் சகல முக்­கி­யஸ்­தர்­க­ளு­ட­னும் கலந்­தா­லோ­சித்துத் தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­ப­டும் என்று நம்­பத்­த­குந்த வட்­டா­ரத்­தி­லி­ருந்து தக­வல் கிடைத்­தது.

ஆனால், அடுத்த உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­த­லில் தனித்­துக் கள­மி­றங்­கவே தாம் இது­வ­ரை­யில் முடிவு செய்­துள்­ள­தா­க­வும், கூட்­டணி அமைத்­தா­லும் தமது கொள்­கை­க­ளுக்­கும் கோரிக்­கை­க­ளுக்­கும் இணங்­கும் தரப்­பு­ட­னேயே அது சாத்­தி­ய­மா­கும் என்று அஸாத் சாலி தெரி­வித்­துள்­ளார்.

Leave a comment