டெக்சாஸ் தாக்குதல் – தாக்குதல்தாரி இனங்காணப்பட்டார்

367 0
அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தின் தேவாலயத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் அமெரிக்கவின் முன்னாள் வான்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெவின் பீ.கெலி என்ற 26 வயதுடையவரே தாக்குதல் மேற்கொண்டவர் என அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் டெக்ஸாஸிலுள்ள சிறு நகரொன்றில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30யிற்க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment