கெட்டலோனியா தலைவர் பெல்ஜியம் காவல்துறையினரிடம் சரண்

304 0
கெட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நிலையில், அவர்கள் பெல்ஜியம் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணம் கெட்டலோனியா.
அங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் முதலாம் திகதி நடந்தது.
இதில் கெட்டலோனியா தனிநாடாக பிரிந்து செல்வதற்கு 90 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் 27ஆம் திகதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கெட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது.
கெட்டலோனியா சுதந்திர பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது.
கலைக்கப்பட்ட கெட்டலோனியா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கெட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்பெயின் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணைக்கு முன்னிலையாகாத பூட்ஜியமோண்ட் உள்பட 5 பேருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கெட்டலோனியாவில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவருடைய ஆலோசகர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் பெல்ஜியம் காவல்துறையல் சரணடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களது வழக்கிறிஞர்கள் கூறுகையில், சரணடைந்த அவர்களை நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்த உள்ளோம்.

விசாரணைக்கு பிறகே நீதிபதி அவர்களை சிறையில் அடைப்பது அல்லது விடுவிக்கப்படுவது குறித்து உத்தரவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment