இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும்!

822 0

இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும். இறு­தி­யில் பொது உடன்­ப­டிக்கை­யின் அடிப்­ப­டை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆட்­சிக்கு வந்த ஒவ்­வொரு அர­சு­க­ளும் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தா­கத் தெரி­வித்தே ஆட்­சி­யைப் பிடித்­தன. இந்த அர­சும் அவ்­வா­று­தான் வாக்­கு­றுதி வழங்­கி­யது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அரச தலை­வர் முறை­மையைப் பொது வாக்­கெ­டுப்பு இல்­லாது நீக்­கு­வ­தாகத் தேர்­த­லின்­போது வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தார்.

ஆனால் அரச தலை­வர் முறை­மையை நீக்கப் பொது வாக்­கெ­டுப்பு அவ­சி­யம். புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கவே அது சாத்­தி­யம். அரச தலை­வர் முறைமை நீக்­கப்­பட வேண்­டும் என்று நாம் 1978ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றோம்.

தமிழ் மக்­க­ளின் நீண்ட நெடிய போராட்­டத்தைப் புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நிறை­வுக்கு கொண்டு வர­மு­டி­யும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நம்­பு­கின்­றது.

தமது கட்­சி­யைப் பலப்­ப­டுத்­த­வும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொள்­கையை உரு­வாக்­க­வும் ஐக்­கிய தேசி­யக் கட்சி முயற்­சிக்­க­லாம்.

நிறை­வேற்று அரச தலை­வர் முறை­மையை தக்­க­வைத்து ஆட்­சி­யைக் கொண்­டு­செல்ல சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கருத முடி­யும். தீர்வு ஒன்று அவ­சி­யம் என்ற நிலைப்­பாட்­டில் இருந்து நாம் செயற்­பட்டு வரு­கின்­றோம்.

இப்­போது நாடா­ளு­மன்­றில் விவா­திக்­கப்­ப­டும் இடைக்­கால அறிக்கை பொது உடன்­பாட்டு அறிக்­கை­யா­கும்.

இதில் முரண்­பா­டு­க­ளும் அனை­வ­ரும் ஏற்­று­கொள்­ளும் நிலைப்­பா­டு­க­ளும் உள்­ளன. இந்த அறிக்­கை­க­ளில் பொது உடன்­பாடு எட்­டா­வி­டின் மீண்­டும் பெப்­ர­வரி மாதம் விவா­திக்­கப்­ப­டும். அதன் போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை வேண்­டும்.

அதில் அனு­மதி கிடைத்­தால் அமைச்­ச­ர­வை­யில் அங்­கீ­கா­ரம் பெறப்­ப­டும். அதன் பின்­னர் மீண்­டும் நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யில் வெற்­றி­பெற வேண்­டும். அதன் பின்­னர் பொது வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டும்.

நாம் ஆட்­சி­யில் இருந்­தி­ருந்­தால் இதனை விடச் சரி­யான அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு இப்­போ­து நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கும். இவர்­க­ளால் முடி­யா­ததை நாம் செய்து காட்­டி­யி­ருப்­போம். இப்­போ­தும் சரி­யான அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்ற ஒரே கார­ணத்தைக் கருத்­திற் கொண்டே போராடி வரு­கின்­றோம்.

போரின் பின்­னர் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க முடி­யாத கார­ணத்தால்தான் பன்­னாட்­டுச் சமூ­கம் எம்மை நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கி­யது. முத­லில் இலங்­கை­யின் இனப்­பி­ரச்­சினை விட­யத்­தில் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும். நாம் தவறைச் செய்­து­கொண்டு பன்­னாட்­டுச் சமூ­கத்தை விமர்­சிக்க இய­லாது என்­றார்.

Leave a comment