யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபர் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபரை இம்மாதம் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனி இம்மாதம் முதலாம் திகதி அங்கு வந்த நோயாளர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது. குறித்த நபர் இம்மடிக்கணனியை எடுத்துச் சென்று நோயாளர் காவு வண்டிக்கு அருகில் நின்றிருந்தபோது வைத்தியசாலை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொலிசாரின் விசாரணையின் போது யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள  அபான்ஸ் காட்சியறையில்

பல மாகாணங்களில் இன்று மாலையும் பலத்த மழை

Posted by - November 7, 2017

இன்று மாலை வேளையில் மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையுடன் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அதிக வறுமையால் மக்கள் பாதிப்பு!அதிகார தரப்பிடம் தீர்வில்லை – சந்திரகுமாா்

Posted by - November 7, 2017

கிளிநொச்சி மாவட்த்தில் தற்போது என்றுமில்லாத  அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனா். வறுமையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மேம்பாட்டுக்கு அதிகார தரப்பினர்களிடம் எவ்வித மாற்றுத் திட்டங்களும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  அமைப்பாளருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா். பச்சிலைப்பள்ளி  இத்தாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இதனை குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்  கிளிநொச்சி மாவட்ட மக்களின்  மிகப் 

யாரும் எதிர்­பா­ராத மாற்­றங்கள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் விரைவில்

Posted by - November 7, 2017

யாரும் எதிர்­பார்க்­காத மாற்­றத்தை எதிர்­வரும் இரண்டு மாதங்­க­ளுக்குள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில்  ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றேன். அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் பாரி­ய­ளவில் வழக்­குகள் குவிந்­தி­ருக்­கின்­றன என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். இரத்­தி­ன­பு­ரியில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், சட்­டமா அதிபர் திணைக்­களம், சட்­ட­வாக்க திணைக்­களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு ஆகி­ய­வற்றின் ஊடாக இடம்­பெறும் சேவைகள் தொடர்­பாக அதி­க­மா­ன­வர்கள் அறி­யாமல்

இந்­தி­யா­வி­லி­ருந்து ரூ. 1300 மில்லியனுக்கு அரிசி இறக்­கு­மதி

Posted by - November 7, 2017

இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த இரண்டு மாத காலத்­திற்குள் 1300 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. வாழ்க்கைச் செல­வுக்­கான அமைச்­ச­ரவை உப­கு­ழுவின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக  20 ஆயிரம் மெற்­றிக்தொன் அரிசி, இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அத்­தொகை முழு­வதும் சந்­தைக்கு விநி­யோ­கத்­திற்­கென அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரி­சியில் நாட்­ட­ரி­சி­யா­னது கிலோ­கிராம் 74ரூபா­வுக்கு விற்­கப்­பட்­டு­வ­ரு­வ­தோடு 25கிலோ­விற்கு மேற்­பட்ட அரி­சியை கொள்­வ­னவு செய்­ப­வ­ருக்கு கிலோகிராம் 73 ரூபா­விற்கு விற்­பனை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்ய முடி­வு­ செய்­யப்­பட்­டுள்ள

பிள்­ளையானை இன்றும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ரவு

Posted by - November 7, 2017

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான பிள்­ளையான் எனப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உள்­ளிட்­ட­வர்கள் மீதான வழக்­கு­ நேற்று திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.  நேற்று மாலை­வரை விசா­ர­ணைகள் இடம்பெற்ற நிலையில் இன்று சந்­தேக நபர்கள் மீண்டும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இதற்­கான உத்­த­ரவை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றம் பிறப்­பித்­துள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­பவம் தொடர்பில் கைது

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Posted by - November 7, 2017

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று யாழ் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

Posted by - November 7, 2017

சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்களில் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த 04 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மணிதினம் காலை வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பெண், சட்டவிரோத போதைப்பொருள்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கிய மருமகனுக்கு

அவசரமாக 15,000 தொன் எரிபொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி

Posted by - November 7, 2017

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அவசரமாக 15,000 தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்தே, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கையில் 16 வீத எரிபொருள் விற்பனைச் சந்தையை தம்வசம் வைத்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அவசரமாக பெற்றோலை விநியோகிப்பதற்கு பல்வேறு விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக, அதன் முகாமைப் பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த பெற்றோல் நாட்டை வந்தடையும் என்றும் அவர்

நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு ஆரம்பம்-அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - November 7, 2017

நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு பிரதமர் தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது