பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

369 0

சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களில் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த 04 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மணிதினம் காலை வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பெண், சட்டவிரோத போதைப்பொருள்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கிய மருமகனுக்கு பிணையாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய ஒரு பெண், வீட்டை உடைத்து களவாடிய ஒருவருக்கு பிணையாக இருந்தவர். அத்துடன் ஏனையவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணையை எதிர்நோக்கி பின்னர் தப்பிச் சென்றவரகள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment