யாரும் எதிர்­பா­ராத மாற்­றங்கள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் விரைவில்

470 0

யாரும் எதிர்­பார்க்­காத மாற்­றத்தை எதிர்­வரும் இரண்டு மாதங்­க­ளுக்குள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில்  ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றேன். அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் பாரி­ய­ளவில் வழக்­குகள் குவிந்­தி­ருக்­கின்­றன என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

இரத்­தி­ன­பு­ரியில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

சட்­டமா அதிபர் திணைக்­களம், சட்­ட­வாக்க திணைக்­களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு ஆகி­ய­வற்றின் ஊடாக இடம்­பெறும் சேவைகள் தொடர்­பாக அதி­க­மா­ன­வர்கள் அறி­யாமல் இருக்­கின்­றனர். கடந்த 10வரு­டங்­க­ளாக இந்த நிறு­வ­னங்கள் மற்றும் திணைக்­க­ளங்­களில் சேவை செய்­து­வரும் நீதி­ப­திகள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எந்த நன்­மையும் கிடைத்­த­தில்லை. அதனால் அவர்கள் மன திருப்­தி­யுடன் பணி­யாற்­றக்­கூ­டிய சூழலை நாங்கள் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­க­வேண்டும்.

மேலும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இன்று பாரி­ய­ளவில் வழக்­குகள் விசா­ர­ணைக்­காக குவிந்து காணப்­ப­டு­கின்­றன. அதற்­காக போது­மான சட்­டத்­த­ர­ணிகள் இந்த திணைக்­க­ளத்தில் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. சுமார் 200 சட்­டத்­த­ர­ணி­களே இருக்­கின்­றனர். அதி­க­மா­ன­வர்கள் இவர்­களின் சேவையை மதிப்­ப­தில்லை. அத்­துடன் பொலி­ஸாரும் தங்­களால்  தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளையும் தங்­களை பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும் என்­ப­தற்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­வைக்­கின்­றனர்.

சிறுவர் துஷ்­பி­ர­யோக, பெண்கள் வன்­முறை வழக்­கு­களே அதிகம் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை முறை­யாக தீர்க்­க­வேண்டும். ஒரு இரவில் இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது.

அத்­துடன் வழக்­குகள் தாம­த­ம­டை­வது தொடர்­பாக பாரியளவில் பேசப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இதற்காக மரண விசாரணை அதிகாரிகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.

Leave a comment