யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபர் விளக்கமறியலில்

252 0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபரை இம்மாதம் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனி இம்மாதம் முதலாம் திகதி அங்கு வந்த நோயாளர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது. குறித்த நபர் இம்மடிக்கணனியை எடுத்துச் சென்று நோயாளர் காவு வண்டிக்கு அருகில் நின்றிருந்தபோது வைத்தியசாலை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிசாரின் விசாரணையின் போது யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள  அபான்ஸ் காட்சியறையில் குறித்த சந்தேக நபர் தொலைக்காட்சியொன்றையும் திரு யுள்ளமை தெரியவந்துள்ளது. தொலைக்காட்சியும் மடிக்கணனியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

Leave a comment