லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அவசரமாக 15,000 தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்தே, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் 16 வீத எரிபொருள் விற்பனைச் சந்தையை தம்வசம் வைத்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அவசரமாக பெற்றோலை விநியோகிப்பதற்கு பல்வேறு விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக, அதன் முகாமைப் பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த பெற்றோல் நாட்டை வந்தடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

