எரிபொருளுக்கான நீண்ட வரிசை தொடர்கிறது 

Posted by - November 7, 2017

நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. நேற்றும், இன்றும் 4 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் பெற்றோலை நாடளாவிய ரீதியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகமே இடம்பெறவதாகவும், மகிழூந்துகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், உந்துருளிகளுக்கு 500 ரூபாவுக்கும், பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றன. எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள்களை விநியோகிக்குமாறு

மானஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது – நீதிமன்றம்

Posted by - November 7, 2017

மானஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த முகாம் கடந்த வாரம்முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், அது அகதிகளின் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது.

உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றின் தீர்ப்பை மாற்ற இயலாது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

Posted by - November 7, 2017

சைட்டம் விடயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் நேற்று இரவு முதல் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள நிலையிலேயே உயர் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘சைட்டம் பிரச்சினைக் குறித்த ஜனாதிபதியின் தீர்விற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இணங்கியுள்ளதாகவும’; அவர் குறிப்பிட்டுள்ளார். இது

மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல இராணுவம் தடை

Posted by - November 7, 2017

தற்போதுள்ள நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும் அச்சுறுத்தல்களுமே தொடர்ந்தும் காணப்படுகின்றது. விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் அன்றைய தினம் சுடரேற்றி நினைவுகூருவதற்காக தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக 06.11.2017 மாலை 3.00 மணியளவில் சென்ற மாவீரர்களின் உறவினர்களை, தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்துத்

மட்டக்களப்பில் இந்த வருடத்தில் எவ்வளவு மழை வீழ்ச்சி?

Posted by - November 7, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தின் இன்று செவ்வாய்க் கிழமை (07) காலை 8.30 மணிவரையில் 1203 மில்லி மீற்றர் மலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரி எ.ரமேஸ் தெரிவித்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை (06) காலை 8.30 மணியிலிருந்து செவ்வாய் கிழமை (07) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மவாட்டத்தில் மீக

வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது

Posted by - November 7, 2017

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகையை முன்னிட்டு வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது.

போத்தலில் பெற்றோல் வழங்கப்படாமைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்பு

Posted by - November 7, 2017

போத்தல்கள் போன்ற பொருட்களில் பெற்றோல் வழங்கப்படாது என்ற சுற்று நிருபத்திற்கு அனைத்து இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெற்றோல் இல்லாமையால் வாகனங்கள் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போது இதுபோன்ற சுற்று நிருபம் வௌியாகியமை மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அச் சங்கத்தினால் வௌியிட்டப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அத்துடன், ஜனாதிபதியால் அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றை இவ்வாறு மட்டுப்படுத்துவது எவ்வாறு என, அனைத்து இலங்கை

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அமைச்சர் ஹக்கீம் கருத்து

Posted by - November 7, 2017

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்றும், அவ்வாறான முயற்சிக்கெதிரான எந்தவிதமான விமர்சனங்களுக்கும் முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இரத்மலானையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைமை அலுவலகத்தில் புதிய பிரதான கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்

மர்ம நிலத்தடி மாளிகை திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

Posted by - November 7, 2017

திருகோணமலையில் De Redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மண்ணின் ஊடகா அதற்குள் நுழைவதற்கான கதவு ஒன்று வைத்து மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் கதவு கருங்கற்களினால் கட்டி மூடப்பட்டுள்ள நிலையில் தோன்றியுள்ள நிலத்தடி அறை மற்றும் ஆங்கில காலகட்டத்தில் கட்டப்பட்டட பீரங்கித் தாங்கி ஒன்றும் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் கொங்கிறீட்,