மர்ம நிலத்தடி மாளிகை திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

366 0

திருகோணமலையில் De Redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்ணின் ஊடகா அதற்குள் நுழைவதற்கான கதவு ஒன்று வைத்து மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் கதவு கருங்கற்களினால் கட்டி மூடப்பட்டுள்ள நிலையில் தோன்றியுள்ள நிலத்தடி அறை மற்றும் ஆங்கில காலகட்டத்தில் கட்டப்பட்டட பீரங்கித் தாங்கி ஒன்றும் இருந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் கொங்கிறீட், மணல் ஆகியவைகள் பயன்படுத்திய ஆரம்ப மாற்றங்கள் மேற்கொண்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 2ஆம் உலகப் போரின் போது அந்த பகுதிகளில் மணல் மற்றும் பெற்றோலினால் நிரப்பப்பட்டு மூடப்பட்டுள்ளது

அத்துடன் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், நிர்மாணிப்புகள் சீமெந்து பயன்பாட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment