போத்தலில் பெற்றோல் வழங்கப்படாமைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்பு

4627 0

போத்தல்கள் போன்ற பொருட்களில் பெற்றோல் வழங்கப்படாது என்ற சுற்று நிருபத்திற்கு அனைத்து இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பெற்றோல் இல்லாமையால் வாகனங்கள் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போது இதுபோன்ற சுற்று நிருபம் வௌியாகியமை மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அச் சங்கத்தினால் வௌியிட்டப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

அத்துடன், ஜனாதிபதியால் அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றை இவ்வாறு மட்டுப்படுத்துவது எவ்வாறு என, அனைத்து இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டுள் அவர்கள், இந்த விடயம் குறித்து தாம் கடும் எதிர்ப்பை வௌியிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, பாவனையாளர்களின் நாளாந்த தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருளுடனான கப்பல் 8ம் திகதியளவில் இலங்கையை வந்தடையும் என்றும், அதன் பின்னர் விநியோக நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment