உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றின் தீர்ப்பை மாற்ற இயலாது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

5027 30
சைட்டம் விடயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் நேற்று இரவு முதல் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள நிலையிலேயே உயர் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘சைட்டம் பிரச்சினைக் குறித்த ஜனாதிபதியின் தீர்விற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இணங்கியுள்ளதாகவும’; அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான தீர்விற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை சைட்டம் குறித்த தீர்விற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள புதிய குழுவில் அரசியல்வாதிகள் உள்ளக்கப்பட கூடாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment