மட்டக்களப்பில் இந்த வருடத்தில் எவ்வளவு மழை வீழ்ச்சி?

406 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தின் இன்று செவ்வாய்க் கிழமை (07) காலை 8.30 மணிவரையில் 1203 மில்லி மீற்றர் மலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரி எ.ரமேஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (06) காலை 8.30 மணியிலிருந்து செவ்வாய் கிழமை (07) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மவாட்டத்தில் மீக நீட்ட வரட்சிக்குப் பின்னர் தற்போது மாலை மற்றும் இரவு வேளைகளிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment