நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு

Posted by - November 12, 2017

திம்புல போகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் போயிருந்த சிறுவன் இன்று (12) போவத்தை கைத்தொழிற்சாலைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாவலி கங்கைக்கு நீர் வடிந்து செல்லும் ஓடை ஓரத்தில் வைத்தே இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை முதல் இந்த சிறுவன் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. திம்புல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று வவுனியாவில்

Posted by - November 12, 2017

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று (12) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை முதல்  வவு­னி­யாவில் நடை­பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவிலுள்ள வன்னி இன் ஹோட்­டலில் இக்கூட்டம் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெறும் இக்­கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனும் பங்­கேற்­க­வுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. கூட்டமைப்பை விட்டு விலக ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜகிரியவில் விபத்து, ரோயல் மாணவன் பலி, 7 பேர் காயம்

Posted by - November 12, 2017

ராஜகிரிய பகுதியில் இன்று (12) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக ராஜகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ராஜகிரியவிலிருந்து மாதின்னாகொட நோக்கி செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை மோசமானதாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது: ப.சிதம்பரம்

Posted by - November 12, 2017

கறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது என்று முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பார்சிலோனா: கைது செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர்களை விடுவிக்ககோரி பிரம்மாண்ட பேரணி

Posted by - November 12, 2017

ஸ்பெயின் அரசால் கைது செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர்களை விடுவிக்ககோரி பார்சிலோனாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் கூட்டாளிகள் விடுதலை

Posted by - November 12, 2017

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் நான்கு கூட்டாளிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.

சிரியா: ரஷ்யா ராணுவ தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பலி

Posted by - November 12, 2017

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணுவம் மூலம் சிரியாவில் தீர்வு காண முடியாது – டிரம்ப், புதின் கூட்டாக அறிவிப்பு

Posted by - November 12, 2017

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போருக்கு ராணுவ மூலம் தீர்வு காணமுடியாது என அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட்டு முடிவு எடுத்துள்ளன.