இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வவுனியாவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவிலுள்ள வன்னி இன் ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
கூட்டமைப்பை விட்டு விலக ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

