ராஜகிரிய பகுதியில் இன்று (12) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக ராஜகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ராஜகிரியவிலிருந்து மாதின்னாகொட நோக்கி செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை மோசமானதாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

