நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு

355 0

திம்புல போகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் போயிருந்த சிறுவன் இன்று (12) போவத்தை கைத்தொழிற்சாலைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாவலி கங்கைக்கு நீர் வடிந்து செல்லும் ஓடை ஓரத்தில் வைத்தே இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை முதல் இந்த சிறுவன் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திம்புல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment