தனது கணவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் வென்னப்புவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவராகும்.
மேலும், இவருக்கு நிலையான தொழில் இல்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி இரவு அவர் அதிக மது போதையில் இருந்ததாகவும், தனது மனைவியை பொல்லால் தாக்க முற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கணவரின் கையில் இருந்த பொல்லைத் பறித்த மனைவி, அவரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் அவர் அந்தப் பொல்லுடன் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

