முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்- ஏ.மரியராசா(காணொளி)

Posted by - January 2, 2017

முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும் என, முல்லைத்தீவு கடற்தொழிலாளர்  சங்கங்களின் சமாசத்தின் தலைவர் ஏ.மரியராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் நல்லதண்ணீர் தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரையான 73 கிலோ மீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளைக் கொண்ட கடற்பகுதிகளிலும், நாயாறு வட்டுவாகல் ஆறு உள்ளிட்ட சிறுகடல் பகுதிகளிலும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதார தொழிலான கடற்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வட்டுவாகல் ஆறு கொக்கிளாய் ஆறு ஆகிய சிறுகடல் பகுதிகளில்

வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் (காணொளி)

Posted by - January 2, 2017

வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் வழங்கும் வைபவம் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 72 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 26 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கு 46 பட்டதாரி ஆசிரியர்களுக்குமாக மொத்தமாக 72 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி மூல பாடசாலைகளில் மனைப்பொருளியல் கற்பிப்பதற்கு 26 பட்டதாரி ஆசிரியர்களும், சிங்கள மொழிமூல

ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் திறப்பு (காணொளி)

Posted by - January 2, 2017

ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் இன்று யாழ்ப்பாணம் கோண்டாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மழழைகளுக்கான பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தரம் டிவகலா தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையமானது 2 தொடக்கம் 5 வயது வரையான மழலைகளுக்கும், 6 தொடக்கம் 8 வயது வரையான பிள்ளைகளும் ஆரம்ப பயிற்சினை வழங்கும் நிலையமாக அமைந்துள்ளது. நிகழ்வில் மழலைகளுக்கான கற்றல்

பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை- எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - January 2, 2017

  பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்கேணி திராய்மடுவில் இடம்பெற்ற நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வு இன்று மட்டக்களப்பு நாவக்கேணி திராய்மடுவில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி, திராய்மடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை, மட்டக்களப்பு பாராளுமன்ற

அரச ஊழியர்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது- பி.வி.அபயக்கோன்

Posted by - January 2, 2017

அரசியல் அதிகார மட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் ஊடாக மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாரிய புரட்சியின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு திட்டங்களின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு முன்னெடுத்த திட்டங்களுக்கு

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றம்

Posted by - January 2, 2017

பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு இந்த ஆண்டில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் அதிகளவான வழக்குகள் காரணமாகவும் இதனால் வழக்குகள் விசாரணை செய்யப்படுவதில்லை என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் தனியான நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும்

Posted by - January 2, 2017

கிழக்கிலிருந்து  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 

32 ஆண்டுகளுக்கு பின்னர்.. யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை

Posted by - January 2, 2017

32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும் என்பதே தந்தையின் பிரார்த்தனை – விதுர விக்ரமநாயக்க

Posted by - January 2, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமது தந்தையின் ஏக பிரார்த்தனையாக அமைந்திருந்தது என முன்னாள் பிரதமர் அமரர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இனியவன் சாவகச்சேரியில் துாக்கில்!

Posted by - January 2, 2017

ஜனநாயகப்போராளிகள் கட்சி முக்கியஸ்தரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியுமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.