அரசியல் அதிகார மட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் ஊடாக மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய புரட்சியின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு திட்டங்களின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு முன்னெடுத்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நெருக்கமாகவுள்ள அரச ஊழியர்கள், கடமைகளை நிறைவேற்றும் போது ஜனாதிபதியினதும், நாட்டினதும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

